பொலிஸார் கிளிநொச்சியில் விசேட நடவடிக்கை!!

இன்று காலை முதல் முக கவசம் அணியாமல் சுகாதார நடைமுறைகளை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கும் சிறப்பு நடவடிக்கையினை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த மாதத்திற்கு முன்னர் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் சமூகத்தில் கொரோனா தொற்று ஏற்படாத சூழலில் மக்கள் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட சுகாதார சட்ட நடைமுறைகளை கடைப்பிடிக்காத வகையில் நடமாட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் நாஅட்டில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் தலைதூக்கியுள்ளது.
இந்த நிலையில் கிளிநொச்சி பொலிசார் மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்ததுடன், முக கவசம் அணிவது தொடர்பில் இறுக்கமான நடைமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வீதிகளால் பயணிக்கும் அனைவரும் முக கவசம் அணியப்பட வேண்டும் என்பதுடன், அதனை முறையாக அணிய வேண்டும் எனவும், அவ்வாறு செயற்படாத அனைவரினதும் சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் தேசிய அடையாள அட்டை ஆகியன பார்வையிட்டதன் பின்னர் பதிவுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த நடைமுறை பின்னபற்றாத நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவித்தள்ளனர்.
வீட்டை விட்டு வெளியு நடமாடும் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்பதுடன், முக்கியமாக மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் பொலிசாரினால் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கிளிநொச்சி பொலிசார் தெரிவிக்கி்றனர்.
இதேவேளை தொற்றுள்ள ஒருவர் பிரதேசத்தில் நடமாடும் சந்தர்ப்பத்தில் அவரிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கிளிநாச்சி பொலிசாரின் குறித்த செயற்பாட்டினை சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.