பிரதமர் மஹிந்த கொரோனா 2 வது அலை தொடர்பில் வெளியிட்ட தகவல்!

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பற்றி கூறி மக்களை தவறாக வழிநடத்த சிலர் தற்போது தேர்தல் மேடையை பயன்படுத்தி வருகின்றனர் எனவும் அப்படியான எந்த அலையும் ஏற்படவில்லை எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் நோக்கில் இப்படியான பிரச்சாரங்கள் மற்றும் பல்வேறு வதந்திகளை சிலர் பரப்பி வருகின்றனர்.
கந்தகாடு, சேனபுர முகாம்களுடன் சம்பந்தப்பட்ட 533 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது. சுகாதார துறையினர், பாதுகாப்பு தரப்பினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து அந்த நிலைமையை சிறப்பாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதனால், மக்கள் இந்த நிலைமை தொடர்பான தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள தேவையில்லை எனவும் பிரதமர் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.