மகிந்த கலந்துகொண்ட கூட்டத்தில் சலசலப்பு!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்ட பிரசாரக் கூட்டமொன்று இன்று செவனகலையில் இடம்பெற்றது.
இதன்போது குறித்த கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
இதன் பின்னர் குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வேட்பாளர்கள் தமக்கிடையில் மோதிக்கொள்ள வேண்டாமென கேட்டுக்கொண்டார்.
இந்த மக்கள் கூட்டத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொனராகலை மாவட்டத்தின் தலைவர் சஷீந்திர ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெல்லவாய தேர்தல் தொகுதியின் விமல் கலகம ஆராச்சி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo