இறந்த கணவரின் காதலில் உருகும் மேக்னா ராஜ்

கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஜூன் மாதம் 7ம் தேதி  சார்ஜாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். இவர் கடந்த 2018ம் ஆண்டு தமிழ் நடிகை மேக்னா ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர் தமிழில் காதல் சொல்ல வந்தேன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பேமஸ் ஆனவர். இந்நிலையில் மனைவி மேக்னா ராஜ் தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். மனைவிக்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்க்கவேண்டும் என சிரஞ்சீவி சார்ஜா அவ்ளளவு ஆசைபட்டார். ஆனால், தற்ப்போது அவர் குழந்தையாகவே மனைவியின் கர்ப்பத்தில் மறு உயிர் பெற்றுள்ளார்.

இந்நிலையில் அவரது மனைவி குடும்ப பெண்களுடன் சேர்ந்து சிருவின் புகைப்படத்தின் அருகே அமர்ந்து சிரித்தபடி எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டு " அன்புள்ள சிரு... சிரு என்றால் கொண்டாட்டம். என் சிரிப்பிற்கு காரணம் சிரு. அவர் எனக்கு அளித்தது விலைமதிப்பற்றது எனது குடும்பம். முடிவில்லாமல் நாம் ஒன்றாக இணைந்திருப்போம். அன்பு, மகிழ்ச்சி நேர்மை என ஒவ்வொரு நாளும் நீ விரும்பியது போலவே இருக்கிறது. நாங்கள் எல்லோரும் உன்னை நேசிக்கிறோம் பேபி மா'' என்று கூறி பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் நீங்கள் இப்படியே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று  கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறோம் என கூறி வருகின்றனர்.
.

Blogger இயக்குவது.