குளோபல் வாரத்தை ஆரம்பித்து மோடி இன்று உரையாற்றுகிறார்!
பிரதமர் நரேந்திர மோடி இந்திய குளோபல் வாரத்தை ஆரம்பித்து வைத்து இன்று (வியாழக்கிழமை) உரையாற்றுகிறார்.
இதன்போது சர்வதேச வர்த்தகம், முதலீடுகள் குறித்து பிரதமர் மோடி தமது கருத்துகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளின் தொழில்நிறுவனங்கள் வெளியேறும் சூழ்நிலையில் இந்தியாவில் முதலீடுகளுக்கும் உற்பத்திகளுக்குமான சாதகமான சூழல் இருப்பதை பிரதமர் மோடி இதன்போது எடுத்துரைபார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 30 நாடுகளின் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்கும் குறித்த இணையவழி மாநாட்டில் 75 அமர்வுகள் இடம்பெறவுள்ளன. இதில் 250 பேர் உரையாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo