ஜூலை 15ஆம் திகதி வரை மும்பையில் 144 தடையுத்தரவு அமுல்!!

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மும்பையில் ஜூலை 15ஆம் திகதி வரை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகராஷ்டிரா விளங்குகிறது.
மகராஷ்டிராவில் மொத்தம் 1,74,761 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு, கொரோனா வைரஸார் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,855 ஆகவும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக மும்பை மாநகரத்தில் கொரோனா தாக்கம் மிக கொடூரமாக இருந்து வருகிறது. மும்பையில் மட்டும் 77,658 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும் 4,556 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
இந்நிலையில், கொரோனா பரவுவதைத் தடுக்க மகராஷ்டிரா அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதற்கமைய மகராஷ்டிராவில் ஜூலை 31ஆம் திகதி வரை முடக்கம் நீடிக்கப்பட்டுள்ள நிலையில், மும்பையில் பொது இடங்களில் ஒன்று கூடுவதைத் தடை செய்யும் வகையில் 144 தடை உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய சேவைகள், மருத்துவ அவசர சேவைகளுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டு ஏனைய நடமாட்டங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் பொது இடத்தில் கூடக்கூடாது என்றும் வழிபாட்டுத் தலங்கள் உட்பட எங்கும் கூட்டம் கூடக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதெநேரம் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை முழுமையாக கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் தடையுத்தரவு அமுல்படுத்தப்பட்டதையடுத்து நவி மும்பை பகுதியிலும் 15ஆம் திகதி வரை 144 தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
விதிகளை மீறுவோருக்கு ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது, ஒரு மாத காலம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.