நளினி சிறையில் தற்கொலை முயற்சி!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஏழு தமிழர்கள் 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள நளினி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

குற்றம் சுமத்தப்ப்பட்டுள்ள ஏழு பேரில் நளினி வேலூர் பெண்கள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நளினிக்கும் சக கைதிகளுக்கும் சண்டை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் நளினி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க திட்டமிட்டிருந்ததாகவும் இதனால் நளினி துணியைக் கொண்டு தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தபோது சிறைக் காவலர்கள் அதை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

முன்னதாக நளினி தன்னை வேலூர் பெண்கள் தனிச் சிறையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றக் கோரியிருந்தார். எனினும் சிறை நிர்வாகம் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.