ஜனநாயக ஆர்வலர் நாதன் லோ வெளிநாட்டில் தஞ்சம்!

ஹொங்கொங்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய ஜனநாயக ஆர்வலர் நாதன் லோ (Nathan Law) வெளிநாடொன்றில் தஞ்சமடைந்துள்ளார்.

புதிதாக அமுல்படுத்தப்பட்டுள்ள தேசிய பாதுகாப்புச் சட்டத்தால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதால் ஹொங்கொங்கை விட்டு வெளியேறியதாக அவர் தனது முகப்புத்தக பதிவில் தெரிவித்துள்ளார்.
ஆனால், “ஹொங்கொங்கை விட்டுச் சென்றபோதும் ஜனநாயகத்துக்கு ஆதரவாக தொடர்ந்து போராடுவேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், அவர் எந்த நாட்டில் இருக்கின்றார் என்ற தகவலை வெளியிட மறுத்துவிட்டார்.
2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘அம்பரல்லா மூவ்மென்ற் (Umbrella Movement)’ என்ற போராட்டத்தின் முக்கிய நபராக நாதன் லோ செயற்பட்டார். இவரே ஜனநாயக ஆதரவு ‘டெமோசிஸ்டோ’ என்ற கட்சியை ஹொங்காங்கில் தொடங்கியவர்.
இதேவேளை, சீனாவின் சர்ச்சைக்குரிய பாதுகாப்புச் சட்டத்தால் ஆயிரக்கணக்கான ஜனநாயக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.