நினைவின் சாரல் - கவிதை!!

சிறு நீர்த்தாரையில்
சிறகுலர்த்தும்
சின்னப் பறவையின்
சிலிர்ப்பை போல
சிந்தனை ஓரம்
சில நினைவலைகள்......


ஆலங்கட்டி மழையின்
ஆலாபனையைப் போலத்தான்
இந்த நினைவுகளும்
களிப்பும் கனமுமாய்.....

வானவில்லின்
வஞ்சனையைப்போல
விதியின் கீறல்களை
விலக்கிவிட முடியுமோ?

மேகத்திரட்சியின் அழகுதான்
மழையென்ற மங்களம்....
சுகித்தலும் சுளித்தலும்
சர்வத்தின் நியதியோ......


கோபி
Blogger இயக்குவது.