ஜனாதிபதியிடம் தன்னியக்க பி.சி.ஆர். உபகரணம் கையளிப்பு

கோரோனாவை விரைவாக அடையாளம் காண்பதற்கு முழுமையான பி.சி.ஆர். தன்னியக்க உபகரணம் ஒன்றை சர்வதேச றோட்டரிக் கழகம், அரச வைத்திய ஆராய்ச்சி நிலையத்துக்கு அன்பளிப்புச் செய்துள்ளது.

பி.சி.ஆர். உபகரணம் தொடர்பாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை தெளிவுபடுத்தும் நிகழ்வு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
குறித்த முழுமையான தன்னியக்க புதிய பி.சி.ஆர். உபகரணத்தின் பெறுமதி இரண்டு கோடி இருபது இலட்ச ரூபாவை விடவும் அதிகமாகும்.
இதன்மூலம் ஆராய்ச்சிகளின்போது முகங்கொடுக்கும் மனிதவளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு முடியும் என்பது முக்கிய விடயமாகும்.
விரைவாகவும், துல்லியமாகவும் மற்றும் செயற்திறனை அதிகரிக்கவும் புதிய உபகரணத்தின் மூலம் முடியும் என்று வைத்தியர்கள் குறிப்பிட்டனர். எதிர்காலத்தில் முகங்கொடுக்கக்கூடிய வேறு விதமான வைரஸையும் அடையாளம் காண்பதற்கு புதிய பி.சி.ஆர். உபகரணத்தை பயன்படுத்த முடியும்.
கொவிட் ஒழிப்புக்காக வைத்திய ஆய்வு உபகரணங்கள் மற்றும் வசதிகளை வழங்குவதற்கு றோட்டரிக் கழகம் 12 கோடி ரூபாவை அன்பளிப்புச் செய்துள்ளது.
இந்த நிலையில் அதற்காக ஜனாதிபதி றோட்டரிக் கழக பிரதிநிதிகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
மேலும் இந்த நிகழ்வில் சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர், சுகாதார அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விசேட வைத்தியர் சஞ்சீவ முனசிங்ஹ, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க, வைத்திய ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார, றோட்டரி கழகத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளின் தலைவர் செபஸ்தியன் கருணாகரன், முன்னாள் தவிசாளர் கே.ஆர்.ரவீந்திரன், பரிந்துரைக்கப்பட்டுள்ள தவிசாளர் புபுது த சொய்சா உள்ளிட்ட பிரமுகர்கள் மற்றும் றோட்டரி கழகத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.