தனியார் பேருந்து ஊழியர்கள் முன்னெடுக்கவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது!!

எரிபொருள் நிவாரணத்தை பெற்றுக் கொடுத்தல் அல்லது பேருந்து கட்டணத்தை உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தனியார் பேருந்து ஊழியர்களினால் முன்னெடுக்கப்படவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு என்பன நாளை (திங்கட்கிழமை) பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்தன.
எரிபொருள் நிவாரணத்தை பெற்றுக் கொடுத்தல் அல்லது பேருந்து கட்டணத்தை உயர்த்துதல், பேருந்து உரிமையாளர்களுக்காக பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக கூறப்படும் 3 இலட்சம் ரூபாய் கடன் தொகையை சலுகை வட்டியுடன் வழங்குதல், மாகாண சபைகளுக்குட்பட்ட நிறுவனங்களினூடாக செலுத்தப்படும் நிதிக்கு டிசம்பர் மாதம் வரை கால அவகாசம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இவ்வாறு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவிருந்தனர்.
இந்த நிலையில், தமது கோரிக்கைகளுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்க போக்குவரத்து அமைச்சர் இணக்கம் தெரிவித்தமையினால் பகிஷ்கரிப்பை தற்காலிகமாக கைவிடுவதாக தனியார் பேருந்து சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.