ஆலய கருவறைக்குள் சுமந்திரனின் சுவரொட்டிகள்!!
மறவன்புலவு பகுதியில் அமைக்கப்பட்டு வரும் புதிய கோவிலின் கருவறைக்குள் சுமந்திரனின் சுவரொட்டிகள் நேற்றைய தினம் இரவு ஒட்டப்பட்டிருந்தன.
தேர்தல் விதிமுறைகளை மீறி ஆலயத்தின் கருவறைக்குள் தேர்தல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமை தொடர்பில் மறவன்புலவு சச்சிதானந்ததினால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் குறித்த சுவரொட்டிகள் அகற்றப்பட்டன.
இது தொடர்பில் சச்சிதானந்தம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
சைவக் கோயில்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் முகமாக அவருடைய தேர்தல் சுவரொட்டிகள் சைவக் கோயில்களின் கருவறைக்குள் ஒட்டப்பட்டுள்ளது.
சுமந்திரன் தன்னுடைய தேர்தல் சுவரொட்டிகளை கருவறையிலேயே ஒட்டுவதன் மூலம் சைவ சமயத்தை இழிவுபடுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்.
தேர்தல் விதிமுறைகளையும் மீறி, மக்களுடைய நம்பிக்கையை உடைத்து கிறிஸ்தவர்களுடைய மேலாதிக்கத்தினை உயர்த்தும் முகமாக கோயில் கருவறையிலேயே தேர்தல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை