போலீஸே அடிக்க கூடாது, அது யாரு ‘ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ்?” – திருமுருகன் காந்தி ஆவேசம்!

சாத்தான்குளம் கொலை வழக்கில் போலீஸ் தவிர ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸுக்கும் தொடர்பிருப்பதாக கூறப்படும் நிலையில் அதற்கு திருமுருகன் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.


சாத்தான்குளம் செல்போன்கடை உரிமையாளர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்த விவகாரத்தில் காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் பெண் காவலர் ரேவதி, மற்றுமொறு காவலரும் சாட்சியமாக மாறியுள்ளனர். இந்த கொலை சம்பவத்தில் காவலர்கள் மட்டுமல்லாது ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸும் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.


ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் என்பது காவல்துறைக்கு உதவுவதற்காக உள்ளூர் பகுதிகளில் உள்ள இளைஞர்களை கொண்ட அமைப்பு. இதில் உள்ளவர்களும் இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து பதிவிட்டுள்ள மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி “காவல்துறை என்பதே தேவையா?' எனும் கேள்வி உலகம் முழுதும் எழுந்து கொண்டிருக்கும் பொழுது, அது யார் 'ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ்' எனும் சமூக விரோத கும்பல்? லத்தியுடன் மக்களை அடிக்க, துன்புறுத்த, கொல்ல இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? RSS பயங்கரவாதிகளுடன் அரசுக்கு நட்பு எதற்கு? தடை செய்!!” என்று கூறியுள்ளார்.

உள்ளூர் இளைஞர்களை கொண்ட ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸுக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் என்ன தொடர்பு? திருமுருகன் காந்தி தேவையில்லாத விஷயங்களை தொடர்பு படுத்தி பேசுகிறார் என்று பலர் அவரது ட்வீட்டுக்கு பதில் அளித்துள்ளனர்.
Blogger இயக்குவது.