மணக்கும் தக்காளி குழம்பு செய்வது எப்படி தெரியுமா!!

தேவையான பொருட்கள்:

1. தக்காளி - 5

2. பூண்டு - 4 பல்

3. பச்சை மிளகாய் - 2 எண்ணம்

4. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

5. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி

6. சீரகத்தூள் -1/2 தேக்கரண்டி

7. மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி

8. பெரிய வெங்காயம் - 2 எண்ணம்

9. மல்லித்தழை -சிறிது

10. உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

11. எண்ணெய் - தேவையான அளவு

12. கடுகு - 1 தேக்கரண்டி

13. உளுத்தம் பருப்பு -1/2 தேக்கரண்டி

14. கருவேப்பிலை -தேவையான அளவு

செய்முறை:

1. தக்காளிப் பழங்களை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

2. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.

3. பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.

4. வெங்காயம் பொன்னிறமானது, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் மற்றும் மல்லித்தூள், சீரகத்தூள் ஆகிய பொருட்களைச் சேர்க்கவும்.

5. அதனுடன் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதைச் சேர்த்துக் கொள்ளவும்.

6. பின் அதில் உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விட்டு, எண்ணெய் பிரிந்தவுடன் மல்லித்தழைகளை தூவி இறக்கவும்.
Blogger இயக்குவது.