ஐ.தே.க.வினாலேயே பொருளாதார வீழ்ச்சியை மீட்க முடியும் – ரணில்!!
சரிந்துக் கொண்டுச் செல்லும் இலங்கைப் பொருளாதாரத்தை மீட்க ஐக்கிய தேசியக்கட்சியால் மட்டுமே முடியும் என்று அந்தக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிலியந்தலையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு கூறினார். ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியுள்ளதாவது, “மக்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய இந்தக் காலக்கட்டத்தில், இந்த அரசாங்கமானது மக்களிடமிருந்து பணத்தை பெற்றுக் கொள்கிறது.
ஜப்பானின் ஜைக்கா நிறுவனம், நிதியமைச்சுக்கு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையின் சமகால அரசாங்கத்தின் நிதிக் கொள்கைகள் தொடர்பாக அவதானத்துடன் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
அரசாங்கம் என்ன சொல்கிறது? சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று கடன் கோரியுள்ளது.
இந்த நிதியமானது பாகிஸ்தான், நேபாளம், பங்காளாதேஸ், மாலைத்தீவுக்கு கடன் வழங்கியுள்ளது.
ஆனால், இலங்கைக்கு மட்டும் கடன் கிடைக்கவில்லை. 800 டொலர் மில்லியனை இதன் ஊடாக பெற்றுக் கொண்டிருக்க முடியும்.
இந்த அரசாங்கத்துக்கு இதனை தேடிக்கொள்ள முடியாது. இதிலிருந்து மீண்டு மக்களுக்கு நிவாரணமளிக்ககூடிய ஒரே ஒரு கட்சி ஐக்கிய தேசியக் கட்சி என்பதை நான் இவ்வேளையில் கூறிக்கொள்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo