124 கிலோ கேரளா கஞ்சாவுடன் வட்டுக்கோட்டையில் இருவர் கைது!!

வட்டுக்கோட்டைப் பகுதியில் 124 கிலோவிற்கும் அதிகமான கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேக நபர்களின் இரு சைக்கிள்களை சோதனைக்குட்படுத்தியபோது, அவை ஒவ்வொன்றினதும் பின்புறத்தில் இரு பொதிகள் காணப்பட்டுள்ளன.
அந்த பொதிகளை சோதனைச் செய்த பொலிஸார் அதிலிருந்து 124 கிலோ 750 கிராம் கேராளா கஞ்சா தொகைளை கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் , சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த 37 , 40 வயதுடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.