ஹொங்கொங்கில் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மாணவர்கள் கைது!

ஹொங்கொங்கில் சீனாவால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அங்கு அச்சநிலை ஏற்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டம் அமுலுக்கு வந்து ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், அதன்கீழ் முதல்தடவையாக ஹொங்கொங் காவல்துறையினர் 16 வயதுக்குட்பட்ட நான்கு மாணவர்களை கைதுசெய்துள்ளனர்.

இந்தக் கைது நடவடிக்கை நேற்று (புதன்கிழமை) இரவு முன்னெடுக்கப்பட்டதுடன், மூன்று ஆண்களும் பெண்ணொருவரும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹொங்கொங்கின் விடுதலைக்காக போராடுவதற்கு வலியுறுத்தும் இணையக் குழுவொன்றில் செயற்பட்டதாக சந்தேகிக்கப்பட்டே அவர்கள் கைதாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி கடந்த ஜூன் 30ஆம் திகதி ஹொங்கொங்கில் சீனாவால் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இந்தச் சட்டம் பிரிவினைவாத மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதையும், ஹொங்கொங்கின் விவகாரங்களில் வெளிநாட்டு தலையீட்டை கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது என்று கூறப்படுகிறது.

எனினும், கடுமையான சிறைத் தண்டனையுடன் பீஜிங்கிற்கு விசுவாசமற்றதாகக் கருதப்படும் எதிர்ப்பாளர்களையும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளையும் குறிவைக்கவே இது பயன்படுத்தப்படும் என்று விமர்சகர்கள் அச்சம் வெளியிட்டனர்.

இந்த தேசிய பாதுகாப்புச் சட்டத்தை எதிர்த்து ஹொங்கொங்கில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் பலர் புதிய சட்டத்தின் ஊடாக கைதுசெய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையிலேயே தற்போது இந்த சட்டத்தின் கீழ் முதல் தடவையாக மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.