கடற்படையினர் தாக்கியதில் மீனவர் ஒருவர் வைத்தியசாலையில் -மன்னாரில் சம்பவம்!!
மன்னார் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற கடற்றொழிலாளர்கள் மீது சிவில் உடையில் இருந்த கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
தாம் பயணித்த படகை இடைமறித்து, சிவில் உடையில் இருந்த கடற்படையினர் ஆவணத்தை பரிசீலினை செய்ய ஆவணங்களை கோரியதாகவும், ஆவணங்களை வழங்குவதற்கு முன்னரே கடற்படையினர் தம் மீது தாக்குல் மேற்கொண்டதாகவும் மீனவர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் மீனவர்கள் கடற்கரையில் ஒன்று கூடி தமது எதிர்ப்பை தெரிவித்தனர்
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீனவர்களுடன் கலந்துரையாடினார்.
இதன்போது பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவிக்கையில்,
தொடர்சியாக மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடு படும் போது மன்னார் பிரதான பாலத்தில் இருந்து மீன் பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பகுதி வரை சுமார் மூன்று இடங்களில் தாங்கள் முழுமையாக சோதனைக்கு உற்படுத்தப்படுவதாகவும் இதனால் தங்களால் உரிய நேரத்தில் மீன் பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இன்றைய தினம் வழமை போல் கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் கடல் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் தங்களை முழங்காளில் வைத்து தடிகளால் அடித்ததாகவும் துவக்கினால் சுடுவதாக அச்சுறுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்
இன்று தாங்கள் இரண்டு படகுகளில் கடலுக்கு சென்றதாகவும் அதில் எங்களுக்கு உரிய அனுமதி பத்திரங்கள் மாற்றி மாற்றி வைக்கப்பட்டமையினால் ஆவணக்களை பெறுவதற்கான இரு படகுகளையும் ஒன்றாக இணைத்து ஆவணங்களை சரிப்படுத்தி கொண்டோம். அதை பார்த்த கடற்படையினரே தங்களைப் சந்தேகத்தின் பெயரில் கடுமையாக தாக்கியதில் மீனவர் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சக மீனவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை , ஆவணங்களை பரிசீலனை செய்வதற்காகவே கடற்படையினர் முயன்றதாகவும், மீனவர்கள் மீது எந்தவொரு தாக்குதல்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் இசுர சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை