தீர்வுகளைக் கண்டறிய இளைஞர்களை வழிநடத்த வேண்டும் – ரணில்!!

சவால்களை எதிர்கொள்ளும்போது, ​​புரட்சிக்குப் பதிலாக தீர்வுகளைக் கண்டறிவதை நோக்கியே இளைய தலைமுறை வழிநடத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், அரசியல் செயற்பாட்டில் இளைஞர்கள் தொடர்ந்தும் ஈடுபடுவதை உறுதி செய்வதற்கான சவாலை உலகம் எதிர்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 1971 இல் இந்த நாட்டில் ஒரு இளைஞர் புரட்சி ஏற்பட்டது. பின்னர் 1987 இல் தெற்கில் இன்னொறு சம்பவமும் இடம்பெற்றது அதில் பல உயிர்கள் பறிபோகின, மேலும் வடக்கில் 1983 இல் தொடங்கி 2009 வரை போராட்டம் இடம்பெற்றது. இத்தகைய புரட்சிகள் ஒருபோதும் வெற்றிபெறாது.

இளைஞர்கள் சமூகத்திலிருந்து விலகியிருக்க இடமளிக்க கூடாது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ஏராளமான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் அவர்களை சமூகத்திற்குள் கொண்டுவர வேண்டும்.

அவர்களுக்கான மாற்றங்களை அறிமுகப்படுத்தத் தவறினால் மட்டுமே, இளைஞர்கள் அரசியலில் இருந்து விலகிச் செல்வார்கள்.

மேலும் கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக, தற்போது ஏராளமானவர்கள் பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர், அத்தோடு வைரஸைக் கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்கப்படாதமையினால் இளைஞர்களின் எதிர்காலம் நிச்சயமற்றதாக காணப்படுகின்றது.

நாட்டின் அல்லது உலகின் எதிர்காலத்தை யாராலும் கணிக்கவோ அல்லது கொரோனா நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவருவதற்கான காலக்கெடுவை வழங்கவோ முடியாது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் மாறிவிட்டது, எனவே சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள திட்டங்களை அறிமுகப்படுத்துவது தலைவர்களின் பொறுப்பாகும்.

அரசியல்வாதிகள் இளைஞர்களின் கனவுகளையும் குறிக்கோள்களையும் நிறைவேற்றுவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வெளியில் இருந்து விமர்சிப்பவர்களை அரசியலுக்குள் கொண்டு வந்து தீர்வுகளைத் தேடுவதற்கான வாய்ப்புகளை வழங்க வேண்டும்” என ரணில் விக்ரமசிங்க கூறினார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.