பிரியா நடேஸ் அவுஸ்ரேலியா அரசிடம் விடுத்துள்ள கோரிக்கை!!

எனது பிள்ளைகள் எனக்கு அருகில் இருப்பதற்கான அனுமதியை அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கவேண்டும் என பேர்த் மருத்துவமனையில் கிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள இலங்கை அகதி பிரியா நடேஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்மஸ்தீவில் தனது இரு பிள்ளைகள் கணவருடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை அகதியான பிரியா உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பேர்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களாக வயிற்றுவலி உட்பட உடல்நலக்குறைவுகள் குறித்து முறைப்பாடு செய்து வந்த நிலையில் கிறிஸ்மஸ்தீவில் போதிய வசதிகள் இல்லாததன் காரணமாக அவரை அதிகாரிகள் பேர்த்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

எனினும், பிரியாவின் கணவர் நடேஸ் மற்றும் பிள்ளைகளான கோபிகாவும், தருணிகாவும் தொடர்ந்தும் கிறிஸ்மஸ்தீவிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே, தனது பிள்ளைகள் எனக்கு அருகில் இருப்பதற்கான அனுமதியை அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கவேண்டும் என பிரியா நடேஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

“நான் எனது ஐந்து வயது மற்றும் 3 பிள்ளைகளுடன் தொலைபேசியில் உரையாடியவேளை அவர்கள் அழுதார்கள். அவர்கள் என்னை வருமாறு அழைக்கின்றனர் அல்லது இங்கு வரவிரும்புகின்றனர்.

நான் இந்த சிகிச்சையை பெறும்போது எனக்கு அவர்களின் ஆதரவு தேவை, அவர்கள் எனது அருகில் இருக்கவேண்டும். அவர்கள் இங்கு வந்து எனது அருகில் இருப்பதற்கு அனுமதியுங்கள் என அரசாங்கத்தை மன்றாட்டமாக கேட்டுக்கொள்கின்றேன்.

நான் தடுப்பிலிருந்தவேளை எனக்காக ஒரே ஆதரவாக எனது கணவர் மாத்திரமே இருந்தார். அதிகாரிகள் தற்போது எனக்கு எனது குடும்பத்தினரிடமிருந்து கிடைத்த ஒரே ஆதரவையும் பறித்துவிட்டார்கள். நான் மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளேன் என அவர் சர்வதேச ஊடகம் ஒன்றிடம் குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.