வைரலாகும் இரு பிரபலங்களின் ருவிட்டர் பதிவுகள்!

நடிகர் பிரசன்னாவின் ருவிட்டர் பதிவொன்றுக்கு இயக்குனர் சேரன் இட்ட பதிவொன்று தற்போது வைரலாகி வருகின்றது.

பிரசன்னாவின் ருவிட்டர் பதிவில், “ஜெயலலிதா அல்லது ஜெயராஜ், ஜெயப்பிரியா அடுத்த பரபரப்பான மரணம், கொலை, கற்பழிப்பு செய்திகள் அடுத்த செய்தி வெளிவரும் வரை மட்டுமே. அதன் பின்னர் செய்திகளும் மாறுகிறது, ஹேஸ்டேக்குகளும் மாறுகிறது.
ஆனால் உண்மையில் மாறவேண்டிய ஒன்று மட்டும் ஒருபோதும் மாறாமல் இருப்பது பெரும் சோர்வை அளிக்கிறது. மறதி ஒரு தேசிய வியாதி” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் நடிகர் பிரசன்னாவின் பதிவிற்கு தற்போது இயக்குனரும், நடிகருமான சேரன் தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
குறித்த பதிவில், “ மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல மறதி எப்போதும் மாறாதது தமிழனுக்கு… எல்லாவற்றையும் அடுத்த செய்தியில் மறந்துவிடுவான் என்ற நம்பிக்கையால்தான் இத்தனை காலம் நடந்த அத்தனை பட்டாபிஷேகங்களும் நடத்தப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார். குறித்த இரு பதிவுகளும் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.