‘ஹாகியா சோபியா’ இஸ்லாமிய வழிபாட்டுக்குத் திறக்கப்பட்டது!!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஹாகியா சோபியா (Hagia Sophia) மாளிகை இஸ்லாமியர்களின் வழிபாட்டிடமாக மாற்றப்பட்டுள்ள நிலையில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக இன்று திறக்கப்பட்டது.

குறித்த மாளிகை அருங்காட்சியமாக பயன்படுத்தப்பட்டு வந்தநிலையில் துருக்கிய நீதிமன்றம் அதனை மசூதியாக மாற்றுவதற்கு உத்தரவிட்டுள்ள நிலையில் இஸ்தான்புல்லில் மக்கள் திரண்டுள்ளனர்.

ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான இந்த மாளிகையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம் 1934 இல் ஒரு அருங்காட்சியகமாக பதிவிட்டது.

இந்நிலையில், துருக்கிய நீதிமன்றம் அதன் நிலையை இரத்துச் செய்து, மசூதியைத் தவிர வேறு எந்தப் பயன்பாட்டுக்கும் அனுமதிக்க முடியாது எனவும் அது சட்டப்படி சாத்தியமில்லை என்றும் அறிவித்தது.

இந்நிலையில், துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகன், உலகப் புகழ்பெற்ற இந்த ஹாகியா சோபியா மாளிகையை ஜூலை 24ஆம் திகதி முதல் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பயன்படுத்துவதாக அறிவித்தார்.

தன்படி, இன்று இந்த மாளிகை தொழுகைக்காக அனுதிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் ஆயிரம் இஸ்லாமியர்கள் பாதுகாப்பு சோதனைச் சாவடிகள் மூலம் அனுமதிக்கப்பட்டனர் என்பதுடன் ஏனையவர்கள் மாளிகைக்கு வெளியில் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இதேவேளை, இந்த மாளிகையை மீண்டும் மசூதியாக மாற்றும் முடிவுக்கு உலகெங்கிலும் உள்ள மத மற்றும் அரசியல் தலைவர்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.

ஹாகியா சோபியா, கிறிஸ்தவ தேவாலயமாக கட்டப்பட்டது என்பதுடன் இது கட்டப்பட்டு ஒன்பது நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஒரு மசூதியாக மாற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.