பதிவுத்திருமணம் செய்த மாணவி தற்கொலை!!
படிக்கும் கால்த்திலேயே இரகசியமாக பதிவுத்திருமணம் செய்து, அதன்பின்னர் விட்டு விலகிசென்ற கணவன், யாழ் நகரில் மாணவியை வழிமறித்து, ஆடைகளை கிழித்து அட்டகாசம் செய்ததை அடுத்து குறித்த யுவதி உயிரை மாய்த்துள்ளார்.
தாயார் வேறு ஒரு திருமணம் செய்த நிலையில், தந்தையாரும் பிரிந்து சென்றுவிட்ட நிலையில் பேத்தியாருடன் குறித்த யுவதி வாழ்ந்து வந்தார்.
கடந்த வருடம் 22 வயதான வாலிபர் ஒருவருடன் காதல் வசப்பட்ட இந்த யுவதி, யாருக்கும் தெரியாமல் இரகசியமாக பதிவுத் திருமணம் செய்திருந்தார். இதன் பின்னர் கணவர் வீட்டில் தங்கியிருந்தார். இந்த காலப்பகுதியில் கணவரினால் அவர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து கடந்த 2 மாதங்களின் முன்னர் பேத்தியின் வீட்டிற்கே திரும்பி வந்ததாகவும், உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், மாணவியை மீண்டும் தன்னுடன் வாழ வருமாறு கணவன் வலியுறுத்தி வந்துள்ளாபோதும், மாணவி அதை மறுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் யாழ் நகரிலுள்ள தனியார் கல்வி நிலையமொன்றுக்கு மாணவி சென்று திரும்பியபோது, கணவன் வழிமறித்து மாணவியுடன் தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் . தன்னுடன் வீட்டுக்கு வர வலியுறுத்தியபோது மாணவி மறுத்துள்ளார்.
இதனையடுத்து ஆத்திரமடைந்த குறித்த நபர் , தர்க்கத்தில் ஈடுபட்டபோது அந்த பகுதிக்கு வந்த உறவினர் ஒருவர் நிலைமையை அவதானித்து, யுவதியை அங்கிருந்து மீட்டு வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
வீட்டிற்கு சென்று நடந்ததை பேத்தியாரிடம் கூறிய யுவதி, இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறையிட வருமாறு கோரியுள்ளார். எனினும், பொலிஸ் முறைப்பாடு செய்ய வேண்டாமென பேத்தியார் மறுத்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு யுவதி சுருக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.குறித்த மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை