சிட்னியில் திரு.ஹக் மெக்டர்மாட் Mr.Hugh McDermott ஜூலை 5 கரும்புலிகள் நினைவு தினத்தில் சிறப்புரை!

ஆஸ்திரேலியா பாராளுமன்ற உறுப்பினர் .திரு.ஹக் மெக்டர்மாட் Mr.Hugh McDermott இன்று ஜூலை 5 கரும்புலிகள் நினைவு தினத்தில் சிட்னியில் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.


தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த கரும்பலிகளின் நினைவாக ஜூலை 5 கரும்புலி நாளாக உலகெங்கும் உள்ள தமிழர்களால் நினைவுகொள்ளப்படுகிறது. அவ்வாறன ஒரு நிகழ்விலேயே hugh mcdermott கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார்.

அவர் தொடர்ச்சியாக தமிழ்மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுத்து வரும் ஒருவராவார்.

தமிழருக்கு எதிராக இடம்பெற்ற கொடூரங்கள் ”இனப்படுகொலை” என அண்மையில் அவர் ஆதாரங்களுடன் பதிவிட்டுருந்ததைத் தொடர்ந்து சிங்களவர்கள் 10,000 கையெழுத்துக்களை அவருக்கு எதிராக திரட்டியிருந்தனர்.

இதனை முறியடிக்கும் வகையில் தமிழ் சமூகம் இலட்சக்கணக்கான கையெழுத்துக்களை அவருக்கு ஆதரவாக திரட்டி அவருக்கு
பேராதரவை கொடுத்தார்கள்.
Blogger இயக்குவது.