அன்பகத்தின் இரு யுவதிகள் திருமண பத்தத்தில் இணைந்தனர்!!
தாய், தந்தையினை இழந்த நிலையில் 18 வருடத்திற்கு மேலாக வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகத்தில் வசித்து வந்த இரு யுவதிகளுக்கு அன்பகத்தின் பொறுப்பாளர் சாமிஅம்மா தலைமையில் இன்று (30) காலை திருமணம் இடம்பெற்றது.
பகீரதா என்ற யுவதி 18 வருடங்களாகவும் துர்க்கா என்ற யுவதி 19 வருடங்களாகவும் வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகத்தில் வசித்துவந்தனர். இவர்கள் திருமண வயதினை அடைந்தமையினால் அன்பகத்தின் நிர்வாகி சாமி அம்மாவின் ஏற்பாட்டில் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
குறித்த திருமண நிகழ்வு வேப்பங்குளம் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமிகள் இந்து அன்பக மண்டபத்தில் சுபநேரத்தில் இன்று நடைபெற்றிருந்ததுடன் ஜெயரூபன், கார்த்திக் ஆகிய இரு இளைஞர்களே அன்பகத்தில் வசித்த யுவதிகளை திருமணம் முடித்திருந்தனர்.
பகீரதா என்ற யுவதிக்கு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன அவர்களும் அவரது துணைவியாரும் தாய் தந்தையாகவும், துர்க்கா என்ற யுவதிக்கு வவுனியா நகரசபை செயலாளர் இராசையா தயாபரன் அவர்களும் அவரது துணைவியாரும் தாய் தந்தையாக பொறுப்பேற்று கன்னிகா தானம் செய்து திருமணத்தினை நடத்திவைத்தனர்.
இத்திருமண நிகழ்வில் தமிழ் விருட்சம் அமைப்பின் சந்திரகுமார் கண்ணன்,சமூக ஆர்வலர்களான விக்னா,கிரைபாகரன், தமிழருவி சிவகுமாரன், இரு மணமகன் வீட்டாரின் உறவினர்கள், வவுனியா மாவட்ட சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பொதுமக்கள் , அன்பகத்தில் உள்ள சிறார்களும் கலந்து கொண்டிருந்தனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை