IPL 2020 – சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாட வாய்ப்பில்லை

 


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதல் ஆட்டத்தில் விளையாட வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் நவம்பர் 10 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான ரெய்னா தனிபட்ட காரணங்களுக்காக போட்டியில் இருந்து விலகி மீண்டும் இந்தியா திரும்பி உள்ளார்.

மேலும் அணியில் உள்ள தீபக் சாஹர், ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய 2 வீரர்களும் அணியில் உள்ள உதவியாளர்களில் 11 பேரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஐ.பி.எல். போட்டியின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்- முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது.

தற்போது எழுந்துள்ள சிக்கல்கள் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் விளையாடாது என்று தகவல் வெளியாகி உள்ளது.

மும்பையுடன் வேறு ஒரு அணி தொடக்க போட்டியில் விளையாடுவதற்கு ஏற்ற வகையில் ஐ.பி.எல். போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.