சிங்கராஜா வனப்பகுதியிலுள்ள ஹோட்டல் விவகாரம்- யோஷித ராஜபக்ஷ மறுப்பு!!

 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ, சிங்கராஜா வனப்பகுதிக்கு அருகில் ஹோட்டல் வைத்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை  அவர் மறுத்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் சுற்றுச்சூழல் ஆர்வலர் சஜீவ சாமிகர, யோஷித ராஜபக்ஷவின் ஹோட்டலுக்கு வசதியாக, சிங்கராஜா முழுவதும் சாலை அமைக்கப்படுவதாக குற்றம் சுமத்தினார்.

இந்நிலையிலேயே யோஷித ராஜபக்ஷ, அதற்கு மறுப்பு வெளியிட்டுள்ளார்.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக, தனது சட்டத்தரணி ஊடாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சில குழுவினர் மீண்டும் ராஜபக்ஷவின்  பெயரை கெடுக்கவும் தவறான தகவல்களை பரப்பவும் முயல்கின்றனர் எனவும் யோஷித ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

தனக்கு உண்மையாகவே இவ்வாறனதொரு ஹோட்டல் இல்லை. பொதுமக்களை தவறாக வழிநடத்தும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமையினால் சட்ட நடவடிக்கை நிச்சயம் எடுப்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo 

Powered by Blogger.