கொரோனா தொற்று உலகளவில் மொத்த எண்ணிக்கை 25 மில்லியனைத் தாண்டியது!
உலகளவில் நாள் ஒன்றுக்கு அதிகளவிலான கொரோனா தொற்று நோயாளிகள் இந்தியாவில் நேற்று அடையாளம் காணப்பட்டதை அடுத்து உலகளவில் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) 25 மில்லியனை கடந்துள்ளது.
கடந்த ஜூலை மாத நடுப்பகுதியில் அமெரிக்காவில் 77,299 பேர் அடையாளம் காணப்பட்டதே நாளொன்றுக்கு பதிவான அதிகளவிலான எண்ணிக்கை என்ற நிலையில் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 78,761 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை தற்போது ஆண்டுதோறும் பதிவுசெய்யப்படும் கடுமையான காய்ச்சல் நோய்களின் எண்ணிக்கையை விட குறைந்தது ஐந்து மடங்கு அதிகம் என உலக சுகாதார அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன.
உலகெங்கிலும், 840,000 க்கும் அதிகமான இறப்புகள் நிகழ்ந்துள்ளன. இது இன்ப்ளூயன்ஸாவுடன் தொடர்புடைய 290,000 முதல் 650,000 வருடாந்த இறப்புகளை விட அதிகம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரேசில், மூன்றாவது இடத்தில் உள்ளது. இருப்பினும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதாரத்தை மீட்டெடுக்க இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை