தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழகத்தில்!!
தமிழகத்தில் இன்று(திங்கட்கிழமை) முதல் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுதும் இம்மாதம் 31ம் திகதிவரை பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் கருதி பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.
நோய் பரவல் தொடர்ச்சியை தடுப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை தோறும் எவ்வித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இன்று தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமுல்படுத்தப்படுகின்றது.
இதேவேளை இபாஸ் அனுமதியை தொடர்வதா அல்லது இரத்து செய்வதா என்பது தொடர்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்களுக்கும் மாநிலங்களுக்கு இடையிலான பயணங்களுக்கும் கட்டுப்பாடு விதித்து பாஸ் முறை அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை