வைரலாகும் ஒரு இலட்சம் சிவ லிங்கங்கள்!

ஒரே கல்லில் செதுக்கப்பட்டதாக கூறும் ஒரு இலட்சம் சிவ லிங்கங்கள் உள்ள ஒளிப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வைரல் புகைப்படங்கள் கர்நாடக மாநிலத்தின் ஆற்றங்கரையில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்திய வரலாற்றில் முதல் முறையாக கர்நாடக மாநிலத்தின் சிவாக்ஷி ஆற்றில் தண்ணீர் அளவு குறைந்துள்ளது. இதனால் ஒரு இலட்சம் சிவ லிங்கங்கள் காணப்படுகிறது என வைரல் பதிவுகளில் கூறப்பட்டுள்ளது.

வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், புகைப்படங்களில் உள்ள சிவலிங்கங்கள் சஹஸ்ரலிங்காவில் எடுக்கப்பட்டவை என தெரியவந்துள்ளது. சஹஸ்ரலிங்கா கர்நாடக மாநிலத்தின் ஷாமலா ஆற்றங்கரையில் அமைந்துள்ள பிரபல வழிபாட்டு தளம் ஆகும். இங்கு ஆயிரம் சிவலிங்கங்கள் உள்ளன.

இந்த தளத்தில் உள்ள சிவலிங்கங்கள் 1678 முதல் 1718 காலக்கட்டத்தில் செதுக்கப்பட்டவை என சஹஸ்ரலிங்கா தளத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.