"கிராமத்துக்கொரு நூலகம்" எனும் தொனிப்பொருளில் நூலகம் அமைக்கும் செயற்றிட்டம்
சகோதர சகோதரிகளே..!
"கிராமத்துக்கொரு நூலகம்" எனும் தொனிப்பொருளில் நூலகம் அமைக்கும் செயற்றிட்டம் ஒன்றை பல்கலைகழக மாணவர் அமைப்பான மனிதம் குழுவினராகிய நாம் மேற்கொள்கின்றோம். உங்களுடைய வீடுகளில் நீங்கள் பயன்படுத்திய நூல்கள் இருப்பின் எங்களுடைய அமைப்பின் நூல் சேகரிப்புக்கு திட்டத்துக்கு வழங்கி செயற்பாட்டில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்..!
நீங்கள் எங்களுக்கு வழங்க நினைக்கும் நூல்களை யாழ்பாண பல்கலைகழகத்தில் மாணவர் கற்கும் பகுதியான Complex ல் வருகின்ற திகதி 25/08/2020 - 04/09/2020 காலை 09.00 மணி தொடங்கி மாலை 5.00 மணி வரை வழங்க முடியும்.
சிரமம் பாராது புத்தகங்களை தந்து மாணவர்களுடைய வாசிப்புக்கு வகைசெய்யுங்கள்..
தாரணி பரமசிவம்
25.08.2020