சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!!
பிரபல பொலிவுட் நடிகை நடிக்கும் தமிழ் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடிக்க டாப்சி ஒப்பந்தமாகியுள்ளார்.
குறித்த படத்தினை இயக்குனர் விஜய்யிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய தீபக் சுந்தர்ராஜன் இயக்கவுள்ளார்.
இப்படத்தில் ஜெகபதி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதேபோல் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் செப்டெம்பர் 1ஆம் திகதி ஜெய்ப்பூரில் ஆரம்பமாகவுள்ளது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டு உள்ளது.
இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை