விராட் கோலி வெளியிட்ட செய்தி

 


விராட் கோலி – அனுஷ்கா ஷர்மாவிற்கு விரைவில் குழந்தை பிறக்கவுள்ளதாக விராட் கோலி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகையான அனுஷ்கா சர்மா, கிரிக்கெட் வீரர் விராட் கோலி காதலித்து 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களது திருமணம் இத்தாலியில் பிரம்மாண்டமாக நடைபற்றது. திருமணத்துக்கு பின்னரும் படங்களில் நடித்து வரும் அனுஷ்கா சர்மா, தற்போது மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ள அனுஷ்கா சர்மா, இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: “இப்போது நாங்கள் மூவர். ஜனவரி 2021ல் குழந்தை பிறக்கப்போகிறது” என குறிப்பிட்டு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதை அறிந்த பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

No description available.

Powered by Blogger.