தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் புத்தளத்திலும் பூர்த்தி!!

புத்தளம் மாவட்டத்தில் நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளரும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான சந்திரசிறி பண்டார தெரிவித்தார்.

புத்தளம் மாவட்டத்தின் புத்தளம் ஆனமடு சிலாபம் வென்னப்புவ மற்றும் நாத்தாணடி ஆகிய ஐந்து தேர்தல் தொகுதிகளுக்கான வாக்குப் பெட்டிகளையும் அதிகாரிகளையும் அனுப்பும் நடவடிக்கை இன்று காலை 7.00 மணி முதல் புத்தளம் செந் அன்றூஸ் மத்திய கல்லூரி, விஞ்ஞானக் கல்லூரி, பாத்திமா மகளீர் கல்லூரி மற்றும் செய்னப் ஆரம்ப பாடசாலை ஆகியவற்றுகளில் இருந்து 421 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளும் அதிகாரிகளும் அனுப்பட்டுள்ளனர்.

இந்த வாக்குப் பெட்டிகளை விநியோகிக்கும் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக ஆறு இலட்சத்தி 17 ஆயிரத்தி 370 வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 13 அரசியல் கட்சிகளையும் 19 சுயேட்சைக் குழுகளையும் சேர்ந்த 352 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதே வேளை வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் தங்கியுள்ள வாக்களர்களுக்கான 12 கொத்தணி வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளரும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான சந்திரசிறி பண்டார மேலும் தெரிவித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.