ஆனைவிழுந்தான் வன அழிப்பு – கைது செய்யப்பட்ட வர்த்தகருக்கு விளக்கமறியல்
புத்தளம் – ஆனைவிழுந்தான் ஈரவலய வனப்பகுதியில் இறால் வளர்ப்புக்காக காணி சுத்திகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வர்த்தகர் ஒருவர் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் காணி சுத்திகரிப்பு பணிக்காக பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இயந்திர வாகனத்துடன் அதன் சாரதி நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனை அடுத்து ஆராச்சிக்கட்டுவ பொலிஸில் குறித்த வர்த்தகர் சரணடைந்ததை அடுத்து இன்று கைது செய்யப்பட்டார், இதனை அடுத்து குறித்த இரண்டு போரையும் இன்று நீதவான் முன்நிலையில் முற்படுத்தியபோதே விளக்கமறியலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை