தென்மராட்சி நுணாவில் பகுதியில் பச்சிளம் குழந்தை மரணம்!!

 

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று திரும்பிய 5 மாதக் குழந்தை திடீர் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்திருக்கின்றது.

யாழ்.தென்மராட்சி- நுணாவில் பகுதியில் இடம்பெற்றுள்ள குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கடந்த 19ம் திகதி குழந்தையை ஏணையில்போட்டு ஆட்டும்போது குழந்தையின் தலை சுவரில் தவறுதலாக மோதியுள்ளது.

இதனையடுத்து குழந்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வீடு திரும்பிய 2 நாட்களின் பின்னர் குழந்தை திடீர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குழந்தையை தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் இன்று அதிகாலை குழந்தை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தில் நுணாவில் வைரவர் கோவிலடியை சேர்ந்த யோ.கிசோபன் என்ற 5 மாத குழந்தையே உயிரிழந்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.