சம்பந்தருக்கு வந்த திடீர் ஞானோதயம்!!

இந்த நாட்டின் அரசியல் சாசனத்தை ஜனநாயகத்தீர்ப்பின் ஊடாக தமிழ்மக்களும், சிங்கள மக்களும் நிராகரித்திருக்கின்றார்கள். எனவே இந்த நாட்டில் சட்டபூர்வமான ஒரு அரசியல்சாசனம் இல்லை. அந்தவகையில் இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடு. என்று தமிழ்தேசியகூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் தெரிவித்தார்.

வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் தமிழரசுகட்சி காரியாலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்துகருத்து தெரிவித்த அவர்,

பாராளுமன்ற தேர்தல் ஒன்று இடம்பெறப்போகின்றது.

நாட்டில் புதிய அரசியல் சாசனம் ஒன்று உருவாக்கபட்டு அதனூடாக ஆட்சி அதிகாரங்கள் தொடர்பான விடயங்கள் பரிசீலிக்கபட்டு அந்தந்த பிராந்தியங்களில் வாழ்கின்ற மக்கள் விசேடமாக வடகிழக்கில் வாழ்கின்ற மக்கள் தங்களுடைய நாளாந்த விடயங்களை தாமேநிறைவேற்றுவதற்கான சூழல் உருவாக்கப்பட வேண்டும்.

அதிகாரங்கள் மத்தியில் குவிந்திருக்காமல் சமஸ்டிகோட்பாட்டின் அடிப்படையில் அவை பரவலாக்கப்பட்டு உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் அந்ததீர்வுகள் வழங்கப்பட வேண்டும். மக்களின் வாழ்க்கையில் அன்றாடம் இடம்பெறுகின்ற பிரச்சனைகளை தீர்ப்பதற்கான அதிகாரத்தை கொழும்பில் குவிக்காமல் அந்தந்த பகுதிகளில் மக்களால் ஜனநாயகரீதியாக தெரிவுசெய்யப்படுகின்ற உறுப்பினர்கள் மூலமாகவும், அமைக்கப்படுகின்ற சபைகளூடாகவும் அந்த கருமங்களைநிறைவேற்றும் முகமாக அந்த தீர்வு இருக்கவேண்டும். இது எமது நீண்டகால போராட்டம். அது ஒரு நியாமானகோரிக்கை. அது அவர்களின் பிறப்புரிமை. இதற்காகவே தந்தைசெல்வா தமிழரசுகட்சியை உருவாக்கி நீண்டகாலமாக போராடியிருந்தார்.

13ஆம் திருத்தச்சட்டத்தை எமது பிரச்சினைக்கான முழுமையான தீர்வாக நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. அதில் பலகுறைகள் இருக்கின்றது. அதி உச்சஅதிகாரப்பகிர்வின் அடிப்படையில் இந்த பிரச்சினை தீர்க்கபடவேண்டும். அந்தந்த பிராந்தியங்களில் வாழ்கின்றமக்கள் தமது தலைவிதியை தீர்மானிக்ககூடிய சூழல்சட்டரீதியாக ஏற்ப்டுத்தப்பட வேண்டும்.

இதுதொடர்பாக நாம் கடந்தஆட்சியில் பல முன்னேற்றகரமான விடயங்களை முன்னெடுத்தோம். அதன்மூலம் கட்சிகள் மத்தியில் ஒருமித்தகருத்துக்கள் காணப்பட்டது. ஆனால் துரதிஸ்டவசமாக அந்த அரசாங்கம் தொடர்ந்து ஆட்சிபுரியக்கூடிய சூழல் இருக்கவில்லை. ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. அதனால் அந்தகருமத்தை தொடரமுடியவில்லை. ஆனால் விரைவில் தொடருவோம் தொடரவேண்டும்.புதிய பாராளுமன்றம் கூடியபின்னர் அரசியல் சாசனம் தொடர்பாகவும், அதிகாரப்பரவல் தொடர்பாகவும் பேச்சுவார்த்தைகள் நடைபெறவேண்டும்.

ஒரு மக்கள் குழாமுக்கோ அல்லது தனித்தேசிய இனத்திற்கோ சுயநிர்ணய உரிமை நிச்சயம்உண்டு. அது மறுக்கப்பட்டால் அவர்களிற்கு வெளியக சுயநிர்ணய உரிமை வழங்கப்படவேண்டும். அதுதான் நிலமை. அது எங்களது பிறப்புரிமை. நாம் இந்த உலகில் பிறந்தவுடனேயே அந்தஉரிமை எமக்கு உருவாகின்றது. அது நிறைவேற்றப்பட வேண்டும். அதற்காக 70 வருடங்களாக நாம் பயணிக்கின்றோம்.

இலங்கை தமிழரசு கட்சியும் தமிழ்தேசிய கூட்டமைப்பும் ஆரம்பகாலம் தொடக்கம் இந்தகருமங்களில் பங்களிப்பைசெய்து அதனை வழிநடாத்தி வருகின்றது.

இம்முறை தேர்தலில் 20 ஆசனங்களை நாம் பெறுவோம் என்று எதிர்பார்கின்றோம். வன்னியில் உள்ள ஆறு அசனங்களில் 5 இணை நாம்பெற வேண்டும். அது வன்னிமக்களின் கடமை.யாழில் 6 பேரை பெற வேண்டும். மட்டக்களப்பில்4 பேரையும் திருமலையில் 2பேரையும் பெறுவதற்கான முயற்சிகளை எடுக்கின்றோம்.

கோட்டாபய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுஇரண்டு நாட்களிற்குபின்னர் தமிழ்மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். நீதியின் அடிப்படையில் கௌரவத்தின் அடிப்படையில் அது தீர்க்கப்படவேண்டும். என்று இந்தியபிரதமர் மோடி தெரியப்படுத்தியிருந்தார்.

அவர் தெரிவுசெய்யப்பட்டு இரண்டு நாட்களிற்குள் இந்திய பிரதமர் தனது பிரதிநிதியை அனுப்பி அந்தவிடயத்தை ஐனாதிபதிக்கு தெரிவித்திருந்தார்.அது நிறைவேற்றப்படவேண்டும். இந்தகருமத்தை நிறைவேற்றுவோம் என்று இலங்கை அரசாங்கம் இந்தியாவிற்கு பல வாக்குறுதிகளை கொடுத்திருக்கின்றது. ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை. எனவே இவற்றைநிறைவேற்றுவதற்கு உங்கள் சார்பில் ஒரு பலமான அணி பாராளுமன்றம் செல்லவேண்டியது அவசியமாகின்றது.

சர்வதேசரீதியாக இந்தநாட்டில் ஒரு அரசியல் சாசனம்இல்லை.1956 ஆண்டு முதல் தமிழ்மக்கள் இந்தஅரசியல் சாசனத்தை நிராகரித்து வருகின்றார்கள். ஐக்கியநாடுகள் சபையின் மனிதஉரிமைபிரகடணத்தின் அடிப்படையில் ஒரு நாட்டில்ஆட்சி புரிவதற்கு அந்தநாட்டு மக்களின் இணக்கப்பாடும் ஒருமித்தகருத்தும் இல்லாமல் அந்தசாசனம் உருவாக்கப்படமுடியாது.இந்தநாட்டில் அந்தவிடயத்தை தமது ஜனநாயகத்தீர்ப்பின் ஊடாக தமிழ்மக்களும், சிங்களமக்களும் நிராகரித்திருக்கின்றார்கள். எனவே இந்த நாட்டில் சட்டபூர்வமான ஒரு அரசியல்சாசனம் இல்லை. அது உருவாக்கப்பட வேண்டும். அந்தவகையில் இலங்கை ஒரு தோல்வியடைந்தநாடு. ஆட்சிபுரிய முடியாதநாடு. இது ஒரு பெரியசாவால். இதனை உள்நாட்டிலும் சர்வதேசரீதியாகவும் எதிர்நோக்கியே தீர்வினைகாணவேண்டும்.

நாங்கள் அந்தவிடயங்களில் தொடர்ந்து ஈடுபட்டவர்கள். அதில் பங்குபற்றியிருந்தவர்கள். நாம் தான் அவற்றை பேசினோம்.நாம் தான் அதனைவரைந்தோம்.எனவே அனைவரும் ஒற்றுமையாக இருந்து அனைவரும் முறையாக வாக்களிப்பதுடன், வன்னியில் 5 இடங்களை பெறவேண்டும் என்று தாழ்மையாககேட்டுக்கொள்கின்றோம்.என்றார்.

பேரினவாத சிங்கள ஆட்சிகளிற்கு முண்டு கொடுத்தும் இன அழிப்பை மேற்கொண்ட சிங்கள ஆட்சியாளர்களை காப்பாற்றியும் தங்கள் சுக போக வாழ்க்கைக்காக தமிழ் மக்களை அடகு வைத்த நீண்ட காலம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை வகிக்கும் சம்மந்தனுக்கு 2020 தேர்தலின் போதுதான் சிறிலங்கா ஒரு தோல்வியடைந்த நாடு எனும் சுடலை ஞானம் பிறந்திருக்கிறது


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.