தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இறுதி தேர்தல் பிரசாரம் பருத்தித்துறையில் !!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டம் பருத்தித்துறையில் இடம்பெற்றநிலையில் பெருந்திரளான மக்கள் திரண்டனர்.

பருத்தித்துறை துறைமுகத்திற்கு அருகாமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5:30 மணியளவில் குறித்த கூட்டத்தை மாவீர்களின் பெற்றோர்கள் ஈகைச்சுடர் ஏற்றி ஆரம்பித்து வைத்தனர்.

இந்தக் கூட்டம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணிச் செயலாளர் கிருபா கிரிதரன் தலைமையில் இடம்பெற்றது. இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிறப்புரை ஆற்றினார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர்.
Blogger இயக்குவது.