12 புதிய நீதிபதிகள் ஜனாதிபதி கோட்டா முன்னிலையில் நியமனம்!!

 


12 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான நியமனங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கியுள்ளார்.

நியமனக் கடிதங்கள் அந்தந்த நீதிபதிகளிடம் இன்று (திங்கட்கிழமை) காலை ஒப்படைக்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது..

அதன்படி, ஒரு தலைமை நீதவான், இரண்டு நீதவான், ஆறு மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதிபதி மற்றும் இரண்டு மூத்த அரச ஆலோசகர்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.

அந்தவகையில் மாவட்ட நீதிபதிகளாக கடமையாற்றிய டபிள்யூ.ஏ.பெரேரா, சீ.மீகொட, ஏ.ஐ.கே.ரணவீர, டபிள்யூ.எம்.எம்.தல்கொடபிட்டிய, சீ.பீ.குமாரி தேல, எச்.எஸ்.பொன்னம்பெரும ஆகியோர் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

அத்துடன் பிரதான நீதவானாக கமையாற்றிய கே.எஸ்.எல் ஜயரத்னவும், நீதவான்களாக சேவையாற்றிய ஆர்.எஸ்.திஸாநாயக்கவும், டீ.ஏ.ஆர் பத்திரனவும் மேலதிக மாவட்ட நீதிபதியாக செயற்பட்ட எஸ்.ஐ.காலிங்கவன்சவும் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இதுதவிர அரச சிரேஷ்ட சட்டவாதிகளான என்.டி.விக்ரமசேகர, என்.கே.சேனவிரத்னவும் ஜனாதிபதி முன்னிலையில் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.