தியாக பயணத்தில் திலீபனுடன் பன்னிரெண்டு நாட்கள்.!!

                 1
2
3
4 “தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தார்.
5 ​ 6 அக் கால வேளையில் அவருக்கு உதவியாளராக இருந்த போராளிக் கவிஞர் மு.வே.யோ. 7 வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து ‘திலீபனுடன் 8 பன்னிரண்டு நாட்கள்’ என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, 9 திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய நாளை முதல் தினமும் பார்வையிட்டு 10 நல்லுார் முன்றலில் நடந்த விடயங்களை அறிந்து கொள்ளலாம்.
11
12
13
14 முன்னுரை
15
16 ​ 17 தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட அரசியற் பிரிவுப் பொறுப்பாளர் 18 திலீபன் அவர்கள், 15.09.1987 அன்று, நல்லூர்க் கந்தசாமி கோயிலின் முன்பாக, 19 ஐந்து கோரிக்கைகளை முன்வைத்துச் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை 20 ஆரம்பித்தார்.
21 இந்திய வல்லாதிக்கத்தின் கண்களைத் திறப்பதற்காக அவர் 22 மேற்கொண்ட அந்தத் தியாகப் பயணத்தில், 12 நாட்கள் ஒரு சொட்டு நீர் கூட 23 அருந்தாமல், மனக்கட்டுப்பாட்டுடன் இருந்து, தமிழ் பேசும் மக்களின் 24 விடுதலைத் தீயைக் கொழுந்து விட்டு எரியச் செய்தபின், 26.09.1987 அன்று 25 ஈகச்சாவு அடைந்தார்.
26 அந்த ஈகப் பயணத்தில் 12 நாட்களும் அவரின் 27 அருகிலிருந்து, வேதனைக்கடலில் மூழ்கி, ஈகை வேள்வியில் சங்கமமாகி, நேரில் 28 கண்ட உண்மை அனுபவங்களை கட்டுரைத் தொடராக உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
29
30
31 ​ 32 இந்த நூல் எழுதப்பட்ட சூழ்நிலை மிகவும் சிக்கலானது. இந்திய 33 வல்லாதிக்கத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மிகவும் 34 உக்கிரமாக மோதிக்கொண்டிருந்த காலகட்டம் அது…… இந்தியாவின் தமிழ்நாடு 35 மாநிலத்தில், அ.இ.அ.தி.மு.க ஆட்சி நீக்கப்பட்டு, ஆளுநர் ஒருவரின் 36 பொறுப்பில் விடப்பட்டிருந்த காலம் அது… தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 37 ஈடுபட்ட இயக்கங்கள் பலவற்றைத் தப்பான வழியில் செலுத்தி, இயக்கங்களுக்கிடையே 38 மோதலை ஏற்படுத்துவதற்காக “றோ” வின் நரி மூளை மிகத் தீவிரமாக வேலை 39 செய்துகொண்டிருந்த காலம் அது. இந்நூலை நான் எழுதுவதற்காகக் கிட்டு 40 அண்ணாவின் அழைப்பை ஏற்று இந்தியா சென்றபோது, வேதாரண்யம் காவல் 41 அதிகாரிகளினால் 1988 மாசி மாதம் கைது செய்யப்பட்டேன். அக்காவல் 42 நிலையத்திலிருந்த எல்லோருமே தமிழர்கள் என்பதனால் என்னை அவர்களிடம் அடையாளம் 43 காட்டியபோது, நான் மிருகத்தனமாக அவர்களால் தாக்கப்பட்டேன்.
44
45
46 47 “தமிழ்நாட்டிற்கு எதற்காக வந்தாய்? ஆயுதம் கொண்டு போகவா? கண்ணிவெடிவைக்க 48 வெடிமருந்து கொண்டு போகவா?”… என்று அடிக்கடி கேட்டுக் கேட்டு மிருகம் போல் 49 அவர்களில் ஒருவன் தாக்கிய போது, என் மூக்கிலிருந்து இரத்தம் 50 பீறிட்டுக்கொண்டு வந்தது. உடம்பின் சகல பகுதிகளிலும் ஏற்பட்ட குண்டாந்தடிக் 51 காயங்களால் உடம்பே பற்றி எரிவது போல் இருந்தது. இந்திய வெறியர்களுக்கு 52 வடம் பிடிக்கும் இவனைப் போன்ற ஒரு சில தமிழர்கள் வரை, உலகத் தமிழனுக்கு 53 வெகு விரைவில் விடிவு ஏற்பட்டு விடாது என்பதை இப்போது நான் 54 எண்ணிக்கொண்டேன்.
55
56
57
58 தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழ்நாட்டு முகாம்கள் 59 எங்கெங்கே இருக்கின்றன என்றும், அவைகளில் யார், யார் இருக்கின்றார்கள் 60 என்றும், வேறு ஒரு உப அதிகாரி (எஸ்.ஐ) என்னிடம் மிரட்டிக் கேட்டான் நான் 61 அதற்கு எதுவித பதிலும் கூறாமல் இறுதிவரை நிற்கவே, இவனும் அவனுடன் சேர்ந்து
Powered by Blogger.