உயிரின் இடப்பெயர்வால் காலுக்கடியில் மறுகுகிறது வாழ்வு.!!
உதைக்கும் கடிகாரம்
நின்று போகும்
நிசப்தத்தில்
மரணத்தின் இரைச்சல் தாளாமல்
காதுகளை மூடுகிறேன்.
மரணத்தின் வாசனை
காற்றைப் போல வந்து
சற்றே இளைப்பாறுகிறது
என் உடலில்...
விடைகொடுக்க முடியாமல்
உயிரை பத்திரப்படுத்த
உடல் போராடுகிறது...
இறுதியில்
உடலோடு ஒட்டாமலே
உதிர்ந்துவிடுகிறது உயிர்..
ஆனாலும் மரணம் வாழ்ந்து
கொண்டுதான் இருக்கிறது...
ஒவ்வொரு உடலிலும்
அதன் உயிரைத் தேடி...
இந்த உயிரின் இடப்பெயர்வால்
காலுக்கடியில் மறுகுகிறது வாழ்வு
மற்றுமொரு பிறத்தலுக்காக...


17,09,2020
கருத்துகள் இல்லை