19வது திருத்தம் குறித்து கெஹலிய வெளியிட்டுள்ள கருத்து!!
அரசியல் யாப்பில் 19 ஆவது திருத்தத்தை விரிவாக நீக்குவதற்காக மக்கள் வழங்கியுள்ள ஆணையை புறம் தள்ள அரசாங்கம் தயாரில்லை என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இலங்கை மன்றக் கல்லூரியில் நடை பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் சட்டத் துறைச்சார்ந்தோர் இதற்கு சாதகமான கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.இதற்கமைவாகவே இதற்கான திருத்த வரைவு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
19 ஆவது அரசியல் அமைப்பு நீக்கப்படும் என்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசாங்கம் தெரிவித்திருந்தது. இதற்காக மக்கள் வரலாற்றில் முதல் தடவையாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தை சமகால அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளார்கள்.
இதனை துரிதமாக நிறைவேற்ற முடியாவிட்டால் அது மக்களுக்கு எதிரான துரோகச் செயலாக அமையும் என்றும் அமைச்சர் கூறினார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை