பருத்திதுறை கடற்பரப்பில் டோறா பிரங்கிக் கலங்கள் மூழ்கடிப்பில் வீரச்சாவை தழுவிக்கொண்ட கரும்புலி மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று!

 

16.09.2001 அன்று யாழ். மாவட்டம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் கப்பல் தொடரணி மீதான தாக்குதலிலும் மற்றும் கடற்படையினரின் இரு அதிவேக “டோறா” பீரங்கிக் கலங்கள் மூழ்கடிக்கப்பட்டு மேலும் சில கடற்கலங்களை சேதமாக்கிய சமரில் வீரச்சாவை தழுவிக்கொண்ட “கடற்புலிகளின் துணைத் தளபதி” லெப். கேணல் இரும்பொறை மாஸ்ரர், கடற்கரும்புலி லெப். கேணல் அனோஜன், கடற்கரும்புலி மேஜர் அருணா, கடற்கரும்புலி மேஜர் நித்தியா, கடற்கரும்புலி மேஜர் காந்தி, லெப். கேணல் குமுதன் உட்பட ஏனைய பத்து மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.


திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையினரின் கப்பல் தொடரணியை பருத்தித்துறைக் கடற்பரப்பில் வழிமறித்து கடற்புலிகளின் துணைத் தளபதி லெப்.கேணல் இரும்பொறை மாஸ்டர் தலைமையிலான கடற்புலிகளும், கடற்கரும்புலிகளும் கடற்படையினருக்கு பலத்த அழிவுகளை ஏற்படுத்தினர்.



பதினைந்துக்கும் அதிகமான அதிவேக தாக்குதல் “டோறா” பீரங்கிப் படகுகளுடன் சுமார் எட்டு மணிநேரம் கடுமையாக சமரிட்டு அவற்றில் இரண்டு “டோறா” பீரங்கிப் படகுகளை மூழ்கடித்து மேலும் இரண்டு “டோறா” பீரங்கிப் படகுகளை கடுமையாகச் சேதப்படுத்தினர்.

இந்தத் தாக்குதலில் ‘கடற்புலிகளின் துணைத் தளபதி’ லெப்.கேணல் இரும்பொறை மாஸ்டர் மற்றும் நான்கு கடற்கரும்புலிகள் உட்பட 10 மாவீரர்கள் வரலாறாகினர்.

இம்மாவீரர்களிற்கு வீரவணக்கத்தை தெரிவித்து கொள்ளுகின்றோம்.

"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்"
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.