அரேபியா நாடொன்றில் 28 இலங்கையர்கள் கொரோனாவுக்கு பலி!

சவுதி அரேபியாவில் தொழில்செய்யும் இலங்கையர்களில் 28 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை சவுதி அரேபியாவில் உள்ள இலங்கைக்கான தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 04 மாதங்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், இவர்களில் இரண்டு வீட்டுப் பணிப்பெண்களும் அடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களின் உடல்கள் அந்நாட்டினதும், சர்வதேச சட்டத்தின்படியும் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.