கல்யாணியை பிரிந்ததை உறுதி செய்த சூர்யகிரண்

 


தமிழ் சினிமாவில் மாஸ்டர் சுரேஷ் என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர் சூர்யகிரண்.

 தெலுங்கில் சில படங்களை இயக்கியுள்ளார். இவருக்கும் நடிகை கல்யாணிக்கும் பத்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 

அதன்பின் இருவரும் பிரிந்துவிட்டனர். ஆனால், அதை வெளியில் சொல்லாமல் இருந்தனர்.

மலையாள நடிகையான கல்யாணி குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர். 'வருஷம் 16' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். 

 தமிழில் 'கண்ணுக்குள் நிலவு, அப்பு, பெண்ணின் மனதைத் தொட்டு, நினைக்காத நாளில்லை, சமுத்திரம், காசி, புன்னகைப்பூவே' ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார். தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் பல படங்களில் நடித்திருக்கிறார்.

சூர்யகிரண் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் வாரத்திலேயே எலிமினட் ஆகிவிட்டார். 

அதற்குப்பின் ஒரு பேட்டியில் தன் மனைவி கல்யாணி தன்னை விட்டுப் பிரிந்து சென்றதைப் பற்றி வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்.

“நான் அவரை இன்னும் நேசிக்கிறேன். அவர் தான் என்னை விட்டுப்பிரிந்துவிட்டார். என்னுடன் வாழ அவருக்குப் பிடிக்கவில்லை. அதற்காக அவர் சில காரணங்களை வைத்துள்ளார். 

எனக்கு அவருடன் எந்தப் பிரச்சினையும் இல்லை,” என்று தெரிவித்திருக்கிறார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.