2 கோடியே 97 லட்சம் பேருக்கு கொரோனா உலகம் முழுவதும் !


சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.


இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.


இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 97 லட்சமாக அதிகரித்துள்ளது.


குறிப்பாக இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்துள்ளது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 83 ஆயிரத்து 809 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


அதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 35 ஆயிரத்து 925 பேருக்கும், பிரேசிலில் 34 ஆயிரத்து 755 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதன் மூலம் கொரோனா வேகமாக பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.


தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2 கோடியே 97 லட்சத்து 14 ஆயிரத்து 680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 72 லட்சத்து 53 ஆயிரத்து 719 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 866 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 


வைரஸ் பாதிப்பில் இருந்து 2 கோடியே 15 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 9 லட்சத்து 38 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.


கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-


அமெரிக்கா - 67,87,625

இந்தியா - 49,30,236

பிரேசில் - 43,84,299

ரஷியா - 10,73,849

பெரு - 7,38,020

கொலம்பியா - 7,28,590

மெக்சிகோ - 6,71,716

தென் ஆப்பிரிக்கா - 6,51,521

ஸ்பெயின் - 6,03,167

அர்ஜெண்டினா - 5,77,338


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboo



 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.