2020ஆம் ஆண்டுக்கான பரீட்சைகள் நடைபெறும் திகதி அறிவிப்பு!

 


2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை 2020 எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

இந்த பரீட்சைக்காக நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 2648 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பீ.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இதேவேளை 2020 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டொபர் மாதம் 11 ஆம் திகதி நாடு முழுவதிலும் உள்ள 2936 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பரீட்சை நடைபெறவுள்ள காலப்பகுதிக்குள் பரீட்சை மத்திய நிலையங்கள் அமைந்துள்ள பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு, தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு, மாகாண கல்வி பணிப்பாளர்கள் வலையகல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள் உள்ளிட்டோருக்கு இது தொடர்பாக அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைவாக கல்வி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் மகாண சுகாதார சேவைப்பணிப்பாளர் மற்றும் மாவட்ட சுகாதார சேவைப்பணிப்பாளர்கள் ஆகியோரை இணைத்து மாகாண கல்வி பணிப்பாளர்கள், வலையக்கல்வி பணிப்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்களினால் பெற்றோரின் ஒத்துழைப்புடன் இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.