காங்கேசன்துறைக் கடலில் "லங்காமூடித"டோறா மீதான கடற்கரும்புலி தாக்குதலில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களின் 25ம்ஆண்டு நினைவு!!
20.09.1995 அன்று யாழ். மாவட்டம் மாதகல் – காங்கேசன்துறைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் வழங்கல் கப்பல் “லங்காமூடித” மற்றும் அதிவேக “டோறா” பீரங்கிக் கலம் மீதான கரும்புலித் தாக்குதலிலும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட “முல்லை மாவட்ட கடற்புலிகளின் மரசியல்துறை பொறுப்பாளர்” கடற்கரும்புலி மேஜர் அன்பு / அந்தமான், கடற்கரும்புலி மேஜர் கீர்த்தி, கடற்கரும்புலி கப்டன் செவ்வானம், கடற்கரும்புலி கப்பன் சிவா / சிவம் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 25ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
கடற்கரும்புலி மேஜர் அன்பு, கடற்கரும்புலி மேஜர் கீர்த்தி ஆகியோர் காங்கேசன்துறைத் துறைமுகக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையினரின் அதிவேக “டோறா” பீரங்கிக் கலம் மீதும், கடற்கரும்புலி கப்பன் சிவா, கடற்கரும்புலி கப்டன் செவ்வானம் ஆகியோர் மாதல் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரின் வழங்கல் கப்பலான “லங்காமூடித” மீதும் தமது கரும்புலித் தாக்குதலைத் தொடுத்தனர்.
கடற்கரும்புலிகளின் இத்தாக்குதல்களின்போது குறித்த இரு கலங்களும் கடுமையாகச் சேதமடைந்ததுடன் கடற்படையினர் பலர் கொல்லப்பட்டும், பலர் காயமடைந்துமிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கரும்புலி மாவீரர்களிற்கு வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்"

கருத்துகள் இல்லை