காக்காகடை சந்தி விபத்தில் ஒருவர் படுகாயம்!

 

கிளிநொச்சி – காக்கா கடை சந்தியில் இன்று (30) மாலை காரும் மோட்டார் வண்டியொன்றும் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

வட்டக்கச்சி பகுதியில் இருந்து ஏ-9 வீதிக்குள் நுழைந்து பரந்தன் நோக்கி திரும்பிய காரும் ஏ-9 வீதியால் கிளிநொச்சி நோக்கி சென்ற மோட்டார் வண்டியுமே விபத்துக்குள்ளானது.

இதன் போது பலத்த காயமடைந்த மோட்டார் வண்டி சாரதி அங்கு நின்றவர்களால் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Blogger இயக்குவது.