கிளிநொச்சியில் பலத்த காற்று: 8 குடும்பங்களை சேர்ந்த 33 பேர் பாதிப்பு

 


கிளிநொச்சி மாவட்டத்தில் வீசிய பலத்த காற்றினால் 8 குடும்பங்களை சேர்ந்த 33பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

நேற்று மாலை 3.30 மணிவரையான புள்ளிவிபர தகவல்களின் அடிப்படையாகக்கொண்டு குறித்த தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை 8வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அடிப்படை கட்டமைப்புக்கள் 5 சேதமடைந்துள்ளதாகவும் அப்புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.

கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் ஆனைவிழுந்தான்குளம், கந்தபுரம், அக்கராயன், பன்னங்கண்டி, கனகபுரம் ஆகிய கிராமங்களை சேந்ர்ந்த 5குடும்பங்களை சேர்ந்த 24பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் காயமடைந்துள்ளதாக அப்புள்ளிவிபரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை 5 வீடுகள் மற்றும் அடிப்படை கட்டமைப்புக்கள் 2 சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் தர்மபுரம் கிழக்கு பகுதியில் 3குடும்பங்களை சேர்ந்த 9பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அப்புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.

பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதங்களிற்கு உள்ளாகியுள்ள அதேவேளை பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு வீடு பகுதியளவில் தேசமாகியுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ புள்ளிவிபர தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பலத்த காற்ற காரணமாக மரங்கள் முறிந்து விழுந்த சந்தர்ப்பங்களும் பதிவாகியுள்ளது. குறித்த பாதிப்புக்கள் தொடர்பான கள ஆய்வுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

Blogger இயக்குவது.